திமுக கூட்டணியில் 33 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ்.. பரபரப்பு தகவல்கள்!

Assembly Election 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ் 33 சட்டமன்ற தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: March 1, 2026 at 7:37 pm

சென்னை மார்ச் 1 2026; திமுக கூட்டணியில் காங்கிரஸ் 33 சட்டமன்ற தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக காங்கிரஸ் தரப்பில் 39 சட்டமன்ற தொகுதிகளும் இரண்டு மாநிலங்கள் அவை சீட்டும் உள்ளாட்சி தொகுதிகளில் உரிய பிரதிநிதித்துவம் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில் தற்போது காங்கிரஸ் 33 சட்டமன்ற தொகுதிகளை கேட்பதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக காங்கிரஸ் தரப்பில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கோரப்பட்டது இந்த விவாகரத்தில் மு க ஸ்டாலின் மிகத் தெளிவாக கூறினார் தமிழ்நாட்டிற்கு இதெல்லாம் சரிவராது என்றார்.

இந்த நிலையில் தாங்கள் முக்கிய அமைச்சரவைகளை கேட்கவில்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கைதான் கேட்கிறோம் என காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் சிலர் பேசினார்கள்.
இது திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்தது இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் நிச்சயமாக பங்கு வழங்கப்படாது என திமுக தெளிவு படுத்தி விட்டது.
எனினும் காங்கிரஸ் திமுக தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன இதற்கிடையில் காங்கிரஸ் தரப்பில் 33 சட்டமன்ற தொகுதிகள் வரை போட்டியிட கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ் கட்சி திமுகவுடன் மட்டுமே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு செல்வப் பெருந்தகை இவ்வாறு பதிலளித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க; தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்.. உழைப்பை தவிர வேறொன்றும் அறியேன்.. மு.க ஸ்டாலின் ட்விட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com