O. Panneerselvam: தன் மகன் ரவீந்திரநாத் உடன் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர் செல்வம், தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
O. Panneerselvam: தன் மகன் ரவீந்திரநாத் உடன் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர் செல்வம், தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Published on: February 27, 2026 at 1:10 pm
சென்னை, பிப்.27, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை செயலரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் பன்னீர்செல்வம். அவருடன், மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன்.
தொண்டனாக இணைந்துள்ளேன்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன்; வரும் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு தந்தால் உறுதியாக போட்டியிடுவேன்” என்றார்.
மு.க. ஸ்டாலின் வரவேற்பு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ள நிலையில், அவரை வருக வருக என வரவேற்கிறேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஓ. பன்னீர் செல்வத்தோடு அவரது மகனும் தி.மு.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணுவுக்கு பாரத ரத்னா.. பிரேமலதா விஜயகாந்த்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com