காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க த.வெ.க ரெடி.. கிரிஷ் சோடங்கர்!

Girish Chodankar: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் விரும்புகிறது என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

Published on: February 25, 2026 at 1:59 pm

சென்னை, பிப்.25, 2026: காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க த.வெ.க தயாராகவுள்ளது என காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகவில்லை.

ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கமாட்டோம் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தெளிவுப்படுத்திவிட்டார். இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதியாவதில் சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஆங்கில நாளேடுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக உள்ளது. அரசியலை பொறுத்தமட்டில் ஒருவர் அனைவருடன் பேசத்தான் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தக் கட்சித்தான் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படாது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தி.மு.க.வினர் அடித்து ஆட வேண்டும்.. உசுப்பேத்தும் செந்தில் பாலாஜி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com