பெண்களுக்கு பெண் ஓட்டுநர்கள்.. பாரத் டாக்ஸி சேவை.. அமித் ஷா கலந்துரையாடல்!

Amit Shah: புதுடெல்லியில் பாரத் டாக்ஸி ஓட்டுநர்களுடன் மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா சந்தித்து உரையாடினார்.

Published on: February 23, 2026 at 4:40 pm

புதுடெல்லி, பிப்.23, 2026: பாரத் டாக்ஸி ஓட்டுநர்களுடன் மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா சந்தித்து உரையாடினார். அப்போது, “பாரத் டாக்ஸி கூட்டுறவு, ஓட்டுநர்களுக்கு அவர்களின் பணியில் உரிமையை வழங்கும் முயற்சியாகும். தனியார் டாக்ஸி நிறுவனங்களில் உள்ள சிக்கல்களை குறைத்து, லாபம் ஓட்டுநர்களுக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “பாரத் டாக்ஸி உலகின் மிகத் திறந்த மற்றும் வெளிப்படையான டாக்ஸி சேவையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தகவலும் ஒட்டுநர்களுக்கு அறிவிப்பாக வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார். மேலும், இந்த முயற்சி ஓட்டுநர்களின் நலனுக்கும், பயணிகளின் பாதுகாப்புக்கும் ஒரு மேடையாக மாறி வருகிறது.

தனித்துவ அம்சம்

இதில், பெண் பயணிகள், பெண் ஒட்டுநர்களைத் தேர்வு செய்யும் வசதி கொண்ட தனித்துவமான அம்சமும் உள்ளது. மேலும், காப்பீட்டு பலன்கள் மற்றும் எளிய கடன் வசதிகள் வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சரத் பவாருக்கு சிறிய அளவில் நீரிழப்பு பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com