தமிழ்நாட்டில் 40 லட்சம் இஸ்லாமிய வாக்குகள்.. தி.மு.க.விடம் 5 தொகுதிகள் கேட்போம்.. காதர் மொகிதீன்

K M Kader Mohideen: தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுமொத்த இஸ்லாமியர்களும் வாக்களித்து மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை அமர்த்துவோம்; ஐந்துசட்டமன்றதொகுதியை கேட்டு பெறுவோம்” என பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.

Published on: February 17, 2026 at 5:37 pm

சென்னை, பிப்.17, 2026: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானமாக, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட் சியை சிறப்பாக நடத்தி செல்லும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக உள்ள 52 மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் 10 சார்பு அணிகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வாக்களிப்பீர்.. கி. வீரமணி அறிக்கை

செயற்குழுவில் முக்கியமாக எதிர்வரும் சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் வெற்றிக்கு எப்படி யொல்லாம் பாடுபடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சட்டமன்றதேர்தலில் மூன்று தொகுதி கொடுத்தார்கள். பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை வழங்கினார்கள். நல்ல ஒத்துழைப்புடன் நவாஸ்கனி வெற்றி பெற்றார்” என்றார்.

மேலும், “தமிழகத்தில் 40 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளது. அந்த அடிப்படையில் 2011-ல் முஸ்லிம்களுக்கு 16 தொகுதியை வழங்குங்கள் என்று கூறினோம். அதன்படி முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகளை வழங்கினார். அதே போன்று, இந்த தேர்தலிலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!
Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com