Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரும் கவிஞருமான சினேகன்.
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரும் கவிஞருமான சினேகன்.

Published on: February 5, 2026 at 2:57 pm
சென்னை பிப்ரவரி 5, 2026; நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவன தலைவருமான கமல்ஹாசன் உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கவிஞர் சினேகன்.
கமல்ஹாசன் கன்னி உரை
கமல்ஹாசன் முதல்முறையாக பாராளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் பிப்ரவரி நான்காம் தேதி வியாழக்கிழமை தனது முதல் உரையை நிகழ்த்தினார். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கிய கமல்ஹாசன், தான் பெரியார் மற்றும் காந்தியின் பேரன் என்றார். தொடர்ந்து தமக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது பேரறிஞர் அண்ணா எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க; அதிமுக தனித்துப் போட்டியிட தயார்… திமுக தயாரா? மு க ஸ்டாலினுக்கு கேள்வி
தொடர்ந்து தமிழ் மற்றும் தமிழர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்துவிட்டார் என்பது போன்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார். மேலும் தமிழ் யாசகம் பெற உதவாது தமிழர்கள் அத்தகைய யாசகத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த உரையை லட்சோப லட்சமக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் கவிஞருமான சினேகன். இது தொடர்பாக சினேகன், “லட்சோப லட்சம் மக்கள் உங்களின் உரையைக் கேட்டு வியந்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கிறார்கள்; இந்தியா மட்டுமல்ல இந்தியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உங்களின் குரல் ஓங்கி ஒலித்து இருக்கிறது.
இதனை உங்களின் ஆளுமை மிக்க உரையாக நான் பார்க்கிறேன்”என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ்.. 18 எம்எல்ஏ, 9 எம்பிக்கள்.. பட்டியலிட்ட செல்வப்பருந்தகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com