இன்று ரூ.10 ஆயிரம் வரை சரிந்த வெள்ளி.. என்ன காரணம்?

Silver Price: வெள்ளி விலை கிலோவுக்கு இன்று (ஜன.30, 2026) ரூ.10,000 வரை சரிந்து விற்பனையாகிறது. தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் உள்ளன.

Published on: January 30, 2026 at 1:23 pm

புதுடெல்லி, ஜன.30, 2026: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகளால் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் சென்னையில் இன்று கிராம் ரூ.415 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ.4 லட்சத்துக்கு 15 ஆயிரம் ஆக காணப்படுகின்றது. நேற்று (ஜன.29, 2026) வெள்ளி விலை கிராம் ரூ.425 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.4 லட்சத்துக்கு 25 ஆயிரம் ஆக காணப்பட்டது. தற்போது வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்து காணப்படுகின்றது.

தங்கம் விலை

தங்கத்தை பொறுத்தமட்டில் 24 காரட் கிராம் ரூ.17,673 எனவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.16,200 ஆகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் 22 காரட் ஆபணத் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 600 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 141,384 ஆகவும் காணப்படுகின்றது.

தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம்?

தங்க விலை சரிவு: அடுத்த அமெரிக்க மத்திய வங்கி தலைவர் யார் என்பதில் சந்தேகம் நிலவுவதால், தங்க விலை 4% சரிந்தது.
கெவின் வார்ஷ் பெயர்: ஜெரோம் பவெல்லை மாற்றி கெவின் வார்ஷ் அமெரிக்க ஃபெடரல் வங்கித் தலைவர் ஆகலாம் என்ற வதந்தி, ஆசிய சந்தையில் தங்க விலையை பாதித்தது.
வரலாற்று உயர்வு: ஜனவரி மாதத்தில் தங்க விலை 20% க்கும் மேல் உயர்ந்துள்ளது. இது 1980க்குப் பிறகு மிகப்பெரிய மாதாந்திர உயர்வாகும்.

தங்கத்துடன் இணைந்து, வெள்ளி விலையும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளாவிய பொருளாதார அச்சங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் அதிக தேவை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com