Actor Nadeem Khan Arrested: துரந்தர் படத்தில் நடித்த நதீம் கான், தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Actor Nadeem Khan Arrested: துரந்தர் படத்தில் நடித்த நதீம் கான், தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: January 26, 2026 at 6:04 pm
மும்பை, ஜன.26, 2026: “துரந்தர்” நடிகர் நதீம் கான் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நதீம் கான், துரந்தர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பதிவுகளை பகிர்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், 41 வயதான அவரது வீட்டு பணிப்பெண் ஒருவர், நதீம் கான் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, மும்பையின் வெர்சோவா மற்றும் மல்வானி போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் நதீம் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடிகர் நதீம் கான், போலீஸ் காவலில் உள்ளார், விசாரணை நடைபெற்று வருகிறது. நதீம் கான், முன்னணி பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் ஹுசைன், சஞ்சய் மிஷ்ரா ஆகியோருடன் திரையில் தோன்றியுள்ளார்.
அவரது சமூக ஊடக கணக்கில், இந்நடிகர்களுடன் எடுத்த பழைய புகைப்படங்கள் நிரம்பியுள்ளன. கிரிதி சனோன், பங்கஜ் திரிபாதி நடித்த மிமி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபாஸின் மிகப்பெரிய தோல்வி படம்.. ஆதி புரூஷ் or தி ராஜா சாப்? எது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com