TTV Dhinakaran: தமிழ்நாட்டை போராட்டக் களமாக்கியதும் ஊழலில் நிலைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
TTV Dhinakaran: தமிழ்நாட்டை போராட்டக் களமாக்கியதும் ஊழலில் நிலைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Published on: January 24, 2026 at 5:41 pm
சென்னை ஜனவரி 24, 2026; அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தைப் போராட்டக் களமாக்கியதும், ஊழலில் திளைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை; திமுக இழைத்த அநீதிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன், ” இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றிய போது, கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது உரையில் சிலவற்றை கூற மறந்து விட்டார்; அவை, அத்தியாவசிய பொருட்களின் விலை, வரி மற்றும் கட்டணங்கள், இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம், வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், கொலை கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுப்பதில் தோல்வி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் அதிகரிப்பு, அனைத்து துறைகளிலும் ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு நிர்வாகம்” என டிடிவி தினகரன் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் இன்று நீண்டகால இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு கூட உரிய பதில் கிடைக்கவில்லை; இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்த நேரத்தில் நான் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக செய்த துரோகத்திற்கு இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களின் நலன் கருதி.. கோரிக்கை வைத்த மருத்துவர் ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com