PM Narendra Modi: குஜராத் மாநிலத்தைப் போன்று கேரளமும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளது என திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
PM Narendra Modi: குஜராத் மாநிலத்தைப் போன்று கேரளமும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளது என திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: January 24, 2026 at 12:04 pm
திருவனந்தபுரம் ஜனவரி 24, 2026; வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வரலாற்றுச் சாதனையை “மாற்றத்திற்கான முக்கியமான ஆணை” எனக் குறிப்பிட்டார். அவர், வாக்காளர்களை மக்கள் சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசாங்கத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மோடி, ஆட்சியில் உள்ள எல்.டி.எப் மற்றும் எதிர்க்கட்சியான யு.டி.எப் ஆகியவை கடந்த பல தசாப்தங்களாக இணைந்து கேரளாவை “சிதைத்துவிட்டன” என கடுமையாக விமர்சித்தார். “கேரளாவை காப்பாற்ற, எல்.டி.எப் – யு.டி.எப் கூட்டணியை முறியடித்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க; அமலாக்கத் துறை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை.. டெல்லி நீதிமன்றம்
அவர், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சி செய்தபோதும், மக்கள் அவர்களின் தவறான ஆட்சியால் விரக்தியடைந்து மாற்றத்தை ஏற்படுத்தியதை எடுத்துக்காட்டினார்.
மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலின் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை எல்.டி.எப் அவமதித்ததாகவும், தங்கம் திருட்டில் சிபிஎம் தொடர்புடையது என குற்றஞ்சாட்டினார். “பாஜக ஆட்சிக்கு வந்தால், விசாரணை நடத்தி குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் – இது மோடியின் உத்தரவாதம்” என அவர் உறுதியளித்தார். மேலும், “குஜராத்தைப் போலவே, கேரளாவும் இப்போது பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க; 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com