Sunita Williams: நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.
Sunita Williams: நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

Published on: January 21, 2026 at 4:23 pm
நியூயார்க், ஜன.21, 2026: நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த ஓய்வு, இன்று காலை நாசா அறிவித்தது.
நாசா வெளியிட்ட செய்திக்குறிப்பில், வில்லியம்ஸ் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்றதாகவும், மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் கழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது நாசா விண்வெளி வீரர்களில் இரண்டாவது அதிகமான காலம் ஆகும். மேலும், அவர் 9 விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டார்; இது மொத்தம் 62 மணி நேரம் என்றும் பெண்களில் அதிகபட்ச சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி விண்வெளியில் மரத்தான் ஓடிய முதல் நபர் என்ற பெருமையும் அவருக்கே செல்லும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வில்லியம்ஸ் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு ஸ்பேஸ் ஷட்டில் டிஸ்கவரி மூலம் விண்வெளிக்கு சென்றார். அவரது வாழ்க்கை காலத்தில், விண்வெளி பயணங்களுடன் மட்டுமல்லாமல், நாசாவின் தரை பணிகளிலும் பங்களித்தார் — விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி, ரஷ்யாவில் நடைபெற்ற நடவடிக்கைகள், எதிர்கால சந்திர பயணத்திற்கான தயாரிப்புகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபருக்கே இந்நிலையா? விமானத்துக்கு என்னப்பா ஆச்சு? பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com