Hariharan: இந்தி சினிமாவில் அதிகாரம் மாற்றம் காரணமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு வாய்ப்புகளை இழந்ததாக முன்பு கூறி இருந்தார்; இந்த கூற்றை ஆமோதித்துள்ளார் முன்னணி பாடகர் ஹரிஹரன்.
Hariharan: இந்தி சினிமாவில் அதிகாரம் மாற்றம் காரணமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு வாய்ப்புகளை இழந்ததாக முன்பு கூறி இருந்தார்; இந்த கூற்றை ஆமோதித்துள்ளார் முன்னணி பாடகர் ஹரிஹரன்.

Published on: January 21, 2026 at 11:29 am
சென்னை ஜனவரி 21, 2026; ஹாலிவுட் சினிமாவில் ஏ ஆர் ரகுமான் ஓரம் கட்டப்படுவதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இதற்கிடையில், “தனது எமர்ஜென்சி திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துவிட்டார்; அவர் பாகுபாடு கொண்டவர்” என நடிகை கங்கணா ரணாவத் விமர்சித்திருந்தார்.
இந்த கருத்து அரசியல் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி மற்றும் TMC எம்.பி மெகபூபா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க; ரெக்கார்ட் பிரேக் செய்த சீரஞ்சீவி.. மண சங்கர வர பிரசாத் காரு வசூல் புதிய நிலவரம்!
இந்தக் கூற்று தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது; இதனை, ஆமோதித்துள்ளார் முன்னணி பாடகர் ஹரிஹரன். அதாவது, ரஹ்மான், ஹிந்தி திரைப்பட இசைத்துறையில் ஏற்பட்ட அதிகார மாற்றம் காரணமாக தான் குறைவான வாய்ப்புகளைப் பெற்றதாக முன்பு கூறியிருந்தார். அதற்கு ஹரிஹரனும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் ஒரு இசையமைப்பாளர் முதலில் படைப்பாற்றல் பற்றி சிந்திக்க வேண்டும்; அப்புறம் தான் பணம் எனவும் ஹரிஹரன் கூறியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில், ‘தூ ஹி ரே’ (உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு) பாடலை பாடிய ஹரிஹரன், ஹிந்தி இசைத்துறையில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; அட்லீ- பிரியா தம்பதி வீட்டில் விரைவில் குவா குவா சப்தம்.. புகைப்படம் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com