Govind Pansare murder case: கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சமீர் கைக்வாட் மராட்டிய மாநிலம் சாங்க்லியில் மரணமடைந்தார்.
Govind Pansare murder case: கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சமீர் கைக்வாட் மராட்டிய மாநிலம் சாங்க்லியில் மரணமடைந்தார்.

Published on: January 20, 2026 at 9:12 pm
புனே, ஜன.20, 2026: சமூக செயற்பாட்டாளர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சமீர் கைக்வாட் மராட்டிய மாநிலம் சாங்க்லியில் மரணமடைந்தார். இது குறித்து, போலீஸாரின் தகவலின்படி, அவர் மாரடைப்பு காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவிந்த் பன்சாரே: மகாராஷ்டிராவின் இடதுசாரி சிந்தனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் 2015 பிப்ரவரியில் கோலாப்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமீர் கைக்வாட் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: அஜ்மல் கசாப் கூட செய்யவில்லை.. மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
அதாவது இந்த வழக்கில் சமீர் கைக்வாட், சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்டு, கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் குற்றவாளியாக பெயரிடப்பட்டார். பன்சாரே மற்றும் அவரது மனைவி உமா, காலை நடைப்பயிற்சிக்குப் பிறகு வீடு திரும்பும் போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், விசாரணையின் போது, கைக்வாட் சம்பந்தப்பட்டதாக போலீசார் கண்டறிந்து, 2015 செப்டம்பரில் சாங்க்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். இதற்கிடையில், 2017-இல் இவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பிறகு அவர் சாங்க்லி நகரின் விகாஸ் சௌக் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக புதிய தலைவர் நிதின் நபீன் எனது பாஸ்.. பிரதமர் நரேந்திர மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com