Mulayam Singh Yadav’s son divorce: மறைந்த அரசியல்வாதி முலாயம் சிங்கின் மகன் அவரது மனைவியை பிரிகிறார்.
Mulayam Singh Yadav’s son divorce: மறைந்த அரசியல்வாதி முலாயம் சிங்கின் மகன் அவரது மனைவியை பிரிகிறார்.

Published on: January 19, 2026 at 6:16 pm
லக்னோ, ஜன.19, 2026: சமாஜ்வாதி கட்சியின் (SP) நிறுவனர் மற்றும் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகனான பிரதீக் யாதவ், தனது மனைவி அபர்ணா யாதவுடன் விவாகரத்து செய்ய உள்ளதாக திங்கட்கிழமை (ஜன.19, 2026) அறிவித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், அபர்ணா தனது குடும்ப உறவுகளை அழித்துவிட்டார் என்றும், புகழும் செல்வாக்கும் பெறுவதற்காகவே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த சுயநலப் பெண்ணை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். அவள் என் குடும்ப உறவுகளை அழித்துவிட்டாள். அவளுக்கு வேண்டியது புகழும் செல்வாக்கும் மட்டுமே” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் அரசியல் பரபரப்பு.. பாஜகவில் இணைந்த மார்க்சிஸ்ட் மாஜி எம்.எல்.ஏ!
தொடர்ந்து, “நான் மிகவும் மோசமான மனநல நிலையில் இருக்கிறேன், ஆனால் அவளுக்கு அதில் கவலை இல்லை. அவளுக்கு அவள் பற்றிய கவலையே அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதீக் யாதவ், முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகன். அவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சகோதரர் ஆவார்.
பிரதீக், 2011 ஆம் ஆண்டு அபர்ணா பிஸ்ட் (இப்போது அபர்ணா யாதவ்) உடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அபர்ணா தற்போது பாஜக (BJP) தலைவராக உள்ளார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை சமாஜ்வாதி கட்சியில் இருந்து தொடங்கினார்.
இந்நிலையில், 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், லக்னோ கேன்டோன்மெண்ட் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார், ஆனால் பாஜக வேட்பாளர் ரீதா பஹுகுனா ஜோஷிக்கு எதிராக தோல்வியடைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ‘அப்பா.. நான் பிரச்சனையில் இருக்கிறேன்’.. வாய்க்காலில் விழுந்த கார்.. சிக்கி தவித்த டெக்கி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com