Kangana Ranaut: நடிகை கங்கனா ரணாவத், தனது திரைப்படமான Emergencyக்கு இசை வழங்க மறுத்ததாகக் கூறி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.
Kangana Ranaut: நடிகை கங்கனா ரணாவத், தனது திரைப்படமான Emergencyக்கு இசை வழங்க மறுத்ததாகக் கூறி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: January 19, 2026 at 11:55 pm
மும்பை ஜனவரி 19, 2026;பகைமையும், பாகுபாடும் கொண்டவர்” என ஏ.ஆர். ரஹ்மான் மீது கடுமையாக விமர்சித்துள்ளார் கங்கனா ரணாவத். மேலும், நடிகை கங்கனா ரணாவத், தனது திரைப்படமான Emergencyக்கு இசை வழங்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ரஹ்மான் தன்னைச் சந்திக்கவே மறுத்ததாகவும், அந்த படத்தை “பிரச்சார படம்” எனக் குறிப்பிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க; இளம் பெண்ணுடன், நடிகர் கோவிந்தா டேட்டிங்.. சுனிதா ஆஹுஜா
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கங்கனா ரணாவத், ஏ.ஆர். ரஹ்மான் குறித்து கடுமையாக விமர்சித்தார்:
அதில், “அன்புள்ள @arrahman ஜி, நான் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதால், திரைப்பட உலகில் எனக்கு பல பாகுபாடுகள் மற்றும் சார்புகள் எதிர்கொள்கிறேன். ஆனால், உங்களைப் போல அதிக பாகுபாடு மற்றும் பகைமை கொண்ட மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு, கங்கனா மற்றும் ரஹ்மான் இடையிலான திரைப்பட அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த குற்றச்சாட்டு, திரைப்பட உலகில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க; நல்ல பெண்கள் வரலாறு படைப்பதில்லை.. பிரியங்கா சோப்ரா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com