Malaika Arora : பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா சமீபத்தில் தன்னைச் சுற்றியுள்ள காதல் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். தனது வாழ்க்கையில் உள்ள “அந்த அடையாளம் தெரியாத நபர்” குறித்து பேசும்போது, அவர் “அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர்” என்று குறிப்பிட்டார்.
Malaika Arora : பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா சமீபத்தில் தன்னைச் சுற்றியுள்ள காதல் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். தனது வாழ்க்கையில் உள்ள “அந்த அடையாளம் தெரியாத நபர்” குறித்து பேசும்போது, அவர் “அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர்” என்று குறிப்பிட்டார்.

Published on: January 19, 2026 at 4:47 pm
Updated on: January 19, 2026 at 4:48 pm
மும்பை, ஜன.19, 2026: நடிகை மலாய்கா அரோரா, “தனது உறவுகள் எப்போதும் ஊடகங்களில் பேசப்பட்டு, தலைப்புச் செய்திகளாக மாறியதாகவும், அதனால் வதந்திகள் பரவுவது புதிதல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை மலாய்கா அரோரா தனது முன்னாள் காதலர் அர்ஜுன் கபூருடன் பிரிவுக்குப் பிறகு, அடிக்கடி ஒருவருடன் சுற்றிவருகிறார் என்ற தகவல்கள் பாலிவுட் திரையுலகை வட்டமடிக்கின்றன. இந்நிலையில் அதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
யூடியூபில் ஒளிபரப்பான The Namrata Zakaria Show நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலாய்கா, தனது தனிப்பட்ட வாழ்க்கை, முன்னாள் காதலர் அர்ஜுன் கபூர் மற்றும் “அடையாளம் தெரியாத நபர்” குறித்த வதந்திகள் பற்றி பேசினார்.
அர்ஜுனைப் பற்றி அவர், “அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர், என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர். கடந்த காலம் அல்லது எதிர்காலம் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஏற்கனவே அதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு, ஊடகங்களில் பரவியுள்ளது” என்று கூறினார்.
52 வயதான மலாய்கா, தனது உறவுகள் எப்போதும் ஊடகங்களில் பேசப்பட்டு தலைப்புச் செய்திகளாக மாறியதாகவும் குறிப்பிட்டார்.
பிரிவுக்குப் பிறகு “மர்மமான மனிதர்” உடன் காணப்பட்டதாக வந்த வதந்திகள் குறித்து அவர், “மக்கள் பேச விரும்புகிறார்கள்.
யாருடன் வெளியே சென்றாலும் அது பெரிய விவாதமாக மாறுகிறது. தேவையற்ற ஊகங்களுக்கு எரிபொருள் கொடுக்க விரும்பவில்லை.
அம்மா கூட கேட்கிறார்..
நான் வெளியே சென்ற ஒவ்வொரு முறையும், அது பழைய நண்பர், திருமணமானவர், மேலாளர் அல்லது யாராக இருந்தாலும் உடனே என்னுடன் இணைக்கப்படுகிறார்கள்.
இதைப் பற்றி நாங்கள் சிரித்து பேசுகிறோம். என் அம்மா கூட அழைத்து ‘இப்போ யார், என்ன பேசுறாங்க?’ என்று கேட்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: இளம் பெண்ணுடன், நடிகர் கோவிந்தா டேட்டிங்.. சுனிதா ஆஹுஜா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com