Kamal Haasan: தனது பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன்.
Kamal Haasan: தனது பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன்.

Published on: January 12, 2026 at 11:47 am
சென்னை ஜனவரி 12, 2026: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இந்த உரிமையியல் வழக்கானது, நீயே விடை என்ற நிறுவனம் இது தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கமல்ஹாசனின் அனுமதி இன்றி வர்த்தக ரீதியாக கமல்ஹாசனின் பெயர், உலகநாயகன் உள்ளிட்ட பெயர்களை டீசர்ட் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள உரிமையியல் மனுவில், தனது பெயரை எந்த தனிநபரோ அல்லது எந்த தனி நிறுவனமோ வர்த்தக ரீதியில் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
மேலும் கமல்ஹாசனின் அனுமதி இன்றி, எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ வர்த்தகரீதியில் அவரின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; படைப்பாளி என்ற முறையில்.. கொதித்தெழுந்த மாரி செல்வராஜ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com