Dr Ramadoss: அன்புமணி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
Dr Ramadoss: அன்புமணி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: January 11, 2026 at 5:39 pm
Updated on: January 11, 2026 at 5:40 pm
சென்னை ஜனவரி 11, 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தந்தை- மகன் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு கட்சி பிரச்சனை, தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகனும் பாமக தலைவருமான அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கினார்.
ஆனால் அன்புமணி தரப்பு, கட்சியின் தலைவரை அப்படி எளிதாக யாராலும் நீக்க முடியாது; அதற்கு முறையான சட்ட வடிவம் உள்ளது என கூறியது.
இந்த நிலையில் பொதுக்குழுவைக் கூட்டிய ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை பறித்ததுடன் அன்பு மணியை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த நிலையில் அன்பு மணியின் மனைவி சௌமியா அன்புமணி வகித்து வந்த பசுமை தாயகத்தின் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் உள்கட்சிப் பிரச்சனை அதிகரித்து வருகிறது; இதற்கிடையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
இது ராமதாசுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்; இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,”அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முதலில் அன்புமணி, அடுத்து தேமுதிக வா? நயினார் நாகேந்திரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com