அமித் ஷா வருகை மு.க ஸ்டாலினை பாதித்துள்ளது.. வானதி சீனிவாசன்!

MLA Vanathi Srinivasan: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை முதலமைச்சர் மு க ஸ்டாலினை பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

Published on: January 7, 2026 at 9:34 pm

கோவை, ஜனவரி 7, 2025: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வெகுவாக பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
இதுகுறித்து பேசிய அவர், ” அரசின் விழாக்களில் கூட அரசியல் பேசி புலம்பி கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். இன்னும் வரும் காலங்களில் கதறல் அதிகமாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வா? அவதூறு ஷா வா?

தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியினால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்; குறிப்பாக இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ” தமிழகத்தில் ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
மேலும், அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா எனவும் விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் வானதி சீனிவாசன் இவ்வாறு பேசியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியை நடத்துகிறோம்.. மு.க ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com