Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தொடர்ந்து, 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தொடர்ந்து, 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Published on: January 7, 2026 at 11:06 am
லக்னோ, ஜன.7, 2026: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) (ஜன.6, 2026) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான வரைவுத் தேர்தல் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் முடிவடைந்த பின் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் சுமார் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, உத்தரப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா கூறுகையில், “தேர்தல் பட்டியலில் முன்பு 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் சுமார் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டதால், திருத்தப்பட்ட புதிய பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “ இதில் இறந்தவர்கள் – சுமார் 46.23 லட்சம் பேர் (2.99%), இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் – சுமார் 2.17 கோடி பேர் (14.06%) என்றும் மறுபடியும் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் (Duplicate voters) – சுமார் 25.46 லட்சம் பேர் (1.65%) என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 82 வயதில் மரணம்.. யார் இந்த சுரேஷ் கல்மாடி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com