Gold and Silver price: இந்தியாவில் தங்கம், வெள்ளி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக வெள்ளியும் பெரிதளவில் உயர்வை சந்தித்து வருகிறது.
Gold and Silver price: இந்தியாவில் தங்கம், வெள்ளி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக வெள்ளியும் பெரிதளவில் உயர்வை சந்தித்து வருகிறது.

Published on: December 29, 2025 at 2:14 pm
Updated on: December 29, 2025 at 2:17 pm
புதுடெல்லி, டிச.29, 2025: இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் வெள்ளி விலை 15 சதவீதம் உயர்ந்து, பியூச்சர்ஸ் சந்தையில் கிலோக்கு 2,42,000 ரூபாய் என்ற புதிய சாதனை உயரத்தை எட்டியது. பின்னர் மார்ச் ஒப்பந்தத்தில் கிலோக்கு 2,39,787 ரூபாயில் நிறைவடைந்தது.
இந்த விலை உயர்வுக்கு, தொழில்துறை தேவையின் அதிகரிப்பு, குறைந்த வழங்கல், அடுத்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்பு மற்றும் புவிசார் அரசியல் அசாதாரணங்கள் காரணமாக அமைந்துள்ளது. உலக சந்தையில் வெள்ளி அவுன்ஸுக்கு 79.70 அமெரிக்க டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.
உள்நாட்டு சந்தையில், மல்டி-கமாடிட்டி எக்சேஞ்ச் (MCX)-இல் பிப்ரவரி ஒப்பந்தத்திற்கான தங்க பியூச்சர்ஸ், 10 கிராமுக்கு 1,39,873 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தில் நிறைவுற்றது. இது வாராந்திர அடிப்படையில் 4.2 சதவீத உயர்வாகும். மேலும், வாரத்தின் போது 10 கிராமுக்கு 1,40,465 ரூபாய் என்ற புதிய சாதனை உயரத்தையும் எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சாந்தாலி மொழியின் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழா..ஜனாதிபதி பங்கேற்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com