Gold and silver price: இன்றைய வணிகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக உயர்வை சந்தித்துள்ளது.
Gold and silver price: இன்றைய வணிகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக உயர்வை சந்தித்துள்ளது.

Published on: December 27, 2025 at 7:24 pm
சென்னை, டிச. 27, 2025: சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 வரை உயர்வை கண்டுள்ளது. வெள்ளியை பொருத்தமட்டில் கிலோ ரூபாய் 31,000 உயர்வை சந்தித்துள்ளது.
தங்கத்தை பொருத்தமட்டில் இன்று காலை ரூ.880 விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹1,04,800 ஆக காணப்படுகிறது.
24 கேரட் தங்கத்தை பொருத்தமட்டில் நேற்று ₹14,062 என விற்பனையானது. இந்த நிலையில் இன்று ₹14,182-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் ஏழைகளின் எட்டாக்கனியாக மாறி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் கிலோ ரூபாய் 31,000 உயர்வை சந்தித்துள்ளது. தங்கத்தின் விலை மிகப் பெரிய உயர்வை கண்டு வரும் நிலையில் வெள்ளியில் பலரும் முதலீடு செய்கின்றனர்; அதுவே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்கின்றனர் விற்பனையாளர்கள்.
இதற்கிடையில் இன்று வெள்ளி கிராம் ₹274 என நிர்ணயிக்கப்பட்டு தற்போது விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹2,74,000 ஆக காணப்படுகின்றது.
நேற்று வெள்ளி கிராம் ₹254 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ₹2,54,000-க்கு விற்பனையானது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க; ஸ்விக்கியில், ரூ.1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னை பயனர்.. யார் இவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com