Pushpa 2 stampede case: தெலுங்கானாவை உலுக்கிய புஷ்பா 2 கூட்ட நெரிசல் மரண வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.
Pushpa 2 stampede case: தெலுங்கானாவை உலுக்கிய புஷ்பா 2 கூட்ட நெரிசல் மரண வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Published on: December 27, 2025 at 6:18 pm
ஹைதராபாத், டிச. 27, 2025: நாட்டை உலுக்கிய புஷ்பா 2, கூட்ட நெரிசல் வழக்கில் குற்றப்பத்திரிகை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேரின் பெயர்கள் இந்த குற்ற பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்டிபள்ளி சினிமா தியேட்டரில் இந்தக் கூட்ட நெரிசல் மரணம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் தியேட்டர் நிர்வாகம் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நடிகர் அல்லு அர்ஜுன் 11ஆவது குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனைக் காணச் சென்ற சந்தியா என்ற 35 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்; அவருடன் தியேட்டருக்கு சென்றிருந்த அவரது எட்டு வயது மகன் பலத்த காயம் அடைந்தார்.
இந்த வழக்கில் அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதை எடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; விழித்தெழுங்கள் இந்துக்களே; மௌனம் பாதுகாக்காது.. காஜல் அகர்வால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com