பிரதமர் மோடி, 11 ஆண்டுகளில் வென்ற 29 சர்வதேச விருதுகள்.. முழு விவரம்!

PM Narendra Modi’s international awards: கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Published on: December 20, 2025 at 1:43 pm

புதுடெல்லி டிசம்பர் 20, 2025: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு டிசம்பர்15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். இந்த மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது, ​​பிரதமர் மோடிக்கு ஓமன் மற்றும் எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ (First Class of the Order of Oman) வழங்கப்பட்டது. இது ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சைத் அவர்களால் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில குறிப்பிடத்தக்கவை:

சர்வதேச விருதுகளின் பட்டியல்

  • நமீபியா: ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் (2025)
  • பிரேசில்: கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ் (2025)
  • திரினிடாட் அண்ட் டொபாகோ: ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் திரினிடாட் அண்ட் டொபாகோ (2025)
  • கானா: ஆஃபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா (2025)
  • சைப்ரஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III (2025)
  • இலங்கை: மித்ரா விபூஷணா (2025)
  • மொரீஷியஸ்: கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன் (2025)
  • பார்பாடோஸ்: ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் (2025)
  • குவைத்: ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் (2024)
  • டொமினிகா: டொமினிகா அவார்ட் ஆஃப் ஆனர் (2024)
  • கயானா: ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (2024)
  • நைஜீரியா: கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (2024)
  • ரஷ்யா: ஆர்டர் ஆஃப் ஸெயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டில் (2019)
  • கிரீஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் (2023)
  • பிரான்ஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஆனர் (2023)
  • எகிப்து: ஆர்டர் ஆஃப் தி நைல் (2023)
  • பிஜி: ஆர்டர் ஆஃப் பிஜி (2023)
  • பப்புவா நியூ கினி: ஆர்டர் ஆஃப் லோகோஹு (2023)
  • பூடான்: ஆர்டர் ஆஃப் தி ட்ரக் கயால்போ (2021)
  • பஹ்ரைன்: கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரெனசன்ஸ் (2019)
  • மாலத்தீவு: ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் இஸ்ஸுத்தீன் (2019)
  • ஐக்கிய அரபு அமீரகம்: ஆர்டர் ஆஃப் ஜேய்ட் (2019)
  • ஐக்கிய நாடுகள்: சாம்பியன் ஆஃப் தி எர்த் விருது (2018)
  • பாலஸ்தீன்: கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் (2018)
  • ஆப்கானிஸ்தான்: ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஜி அமீர் அமானுல்லா கான் (2016)
  • சவுதி அரேபியா: ஆர்டர் ஆஃப் கிங் அப்துலாசிஸ் (2016)
  • எத்தியோப்பியா: கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா (2025)
  • பலாவு: எபாக்ல் விருது (2023)
  • ஓமான்: தி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமான் (2025)

பிரதமர் மோடி, “ஓர்டர் ஆஃப் ஓமன் விருது பெற்றது இந்தியா-ஓமான் நாடுகளுக்கு இடையேயான ஆழமான உறவை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர்கள் பலரும் பாஜக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் இந்த 29 சர்வதேச விருதுகள், அவரது தலைமைத்துவத்தையும், இந்தியாவின் உலகளாவிய தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

இதையும் படிங்க : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு; சி.பி ராதாகிருஷ்ணன் நன்றி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com