Thirupparankundram lamb issue: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பை தி.மு.க திட்டமிட்டு மீறியது என மக்களவையில் அனுராக் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
Thirupparankundram lamb issue: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பை தி.மு.க திட்டமிட்டு மீறியது என மக்களவையில் அனுராக் தாகூர் குற்றஞ்சாட்டினார்.

Published on: December 13, 2025 at 3:20 pm
Updated on: December 13, 2025 at 3:35 pm
புதுடெல்லி, டிச.13, 2025: பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்கூர், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள முருகர் கோவிலில் கார்த்திகை தீபம் விளக்கேற்ற அனுமதிக்காத தமிழக அரசை விமர்சித்தார். இது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அவமதிப்பாகும் என்றார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில், பூஜ்ய நேரத்தின் போது, இந்த விவகாரத்தை எழுப்பிய தாக்கூர், மாநில அரசு நீதிமன்ற உத்தரவை திட்டமிட்டு புறக்கணித்ததோடு, விளக்கேற்றிய பக்தர்கள் மீது லாத்திசார்ஜ் தடியடி நடத்தப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை திட்டமிட்டு மீறியது என்றும் அவர் கூறினார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்கேற்றும் விவகாரம், டிசம்பர் 3ஆம் தேதி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி சுவாமிநாதன், முருகர் கோவில் அருகில்உள்ள தர்கா அருகே உள்ள தீபத்தூணில் இந்த சடங்கை அனுமதித்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில், நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com