யார் அந்த சண்டிகர் பிசினஸ்மேன்? திரிஷா வைத்த முற்றுப்புள்ளி.. திருமணம் எப்போது?

Actress Trisha Krishnan: பஞ்சாப் தொழிலதிபருடன் நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Published on: October 10, 2025 at 10:49 pm

சென்னை, அக்.10, 2025: சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டதாக பரவிய செய்திகளை நிராகரித்துள்ளார் நடிகை திரிஷா கிருஷ்ணன். அந்த வகையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆதாரமற்ற வதந்திகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.

இது குறித்து நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மக்கள் என் வாழ்க்கையை எனக்காக திட்டமிடும்போது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் தேனிலவையும் திட்டமிடுவதற்காக காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. இதற்கு முன் அவர் ராணா டகுபதியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.

முன்னதாக, தொழில்முனைவோர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் செய்தி பரவியது. இந்நிலையில், அவர்கள் 2015 இல் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஆனால் விரைவில் தங்கள் நிச்சயதார்த்தத்தையும் ரத்து செய்தனர்.

இந்த நிலையில், நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுடனும் கிசுகிசுக்கப்பட்டார். அந்த நடிகரின் பிறந்தநாளுக்கு இவர் தெரிவித்த வாழ்த்து இதனை மேலும் சிக்கலாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் காந்தாரா… ரூ.500 கோடி வசூல்!

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
P Chidambaram

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com