Tsunami warning issued in Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tsunami warning issued in Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on: October 10, 2025 at 1:04 pm
மணிலா, அக்.10, 2025: பிலிப்பைன்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை (அக்.10, 2025) 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் வெளியேற்றம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் வோல்கானாலஜி மற்றும் சீஸ்மோலாஜி (Phivolcs) மிண்டனாவோவின் தாவோ ஓரியண்டலில் உள்ள மனே நகருக்கு அருகில் 10 கிமீ ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக உயரமான பகுதிகளுக்கு அல்லது உள்நாட்டிற்குச் செல்லுமாறு பிவோல்க்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையில், ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 186 மைல்களுக்குள் ஆபத்தான அலைகள் ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. மர்மநபர் வெறிச்செயல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com