Annamalai questions DMK Govenment: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைக்காக பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Annamalai questions DMK Govenment: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைக்காக பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on: October 10, 2025 at 12:36 pm
கோவை, அக்.10, 2025: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.9, 2025) கோவை சென்றிருந்தார். அங்கு அவர், தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றுக்கு அரை நாள் விடுமுறை அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. அவர் பேசுகையில், “முதல்வர் மு.க ஸ்டாலின் வருகைக்காக கோவையில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று விடுமுறை அளிப்பது மக்களுக்கு பிடிக்கவில்லை” என்றார். மேலும், “பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும்” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?
இதையடுத்து, வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுகிறதே என்ற கேள்வி அண்ணாமலையிடம் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடந்துகொண்ட விதத்தை தொல். திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? என்றார்.
மேலும், “தலைமை நீதிபதியை தாக்கியதை கண்டித்து நடந்த கூட்டத்துக்கு சென்றுவந்த வி.சி.க.வினரே வழக்குரைஞரை தாக்குதல் நடத்தினார் எப்படி? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு வந்த மத்தியப் பிரதேச போலீஸ்.. பிரபல மருந்து தயாரிப்பாளர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com