TTV Dinakaran : தற்போது உள்ள ஏ.டி.எம்.கே அல்ல இ.டி.எம்.கே என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடி.வி தினகரன்.
TTV Dinakaran : தற்போது உள்ள ஏ.டி.எம்.கே அல்ல இ.டி.எம்.கே என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடி.வி தினகரன்.
Published on: October 4, 2025 at 10:51 pm
தஞ்சாவூர், அக்.4, 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தஞ்சாவூரில் சனிக்கிழமை (அக்.4, 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார். தற்போது உள்ளது ஏ.டி.எம்.கே இல்லை இ.டி.எம்.கே என்றார். அதாவது எடப்பாடி திமுக என்றார்.
தொடர்ந்து பேசிய டி.டி.வி, “ராமசாமியோ குப்புசாமியோ, எடப்பாடி பழனிசாமியைத் தவிர யார் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என் (அ.ம.மு.க.) ஆதரவு உண்டு” என்றார். மேலும், “அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்காக அடிப்படை சட்டத்தையே மாற்றியவர் பழனிசாமி” என்றார்.
த.வெ.க.தான் பொறுப்பு
மேலும், “கரூர் விபத்து தொடர்பான தார்மீகப் பொறுப்பு தவெகவுக்குதான் உள்ளது; விஜய் தார்மீக பொறுப்பேற்றிருந்தால், நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவித்திருக்காது” என்றார்.
மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு
இதையடுத்து, “கரூர் துயரச்சம்பவத்தில் முதல்வர் நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டார்; தவெக-வின் வாதங்கள்யாவும் பொறுப்பற்ற தன்மையைதான் காட்டுகிறது. இச்சம்பவத்தில் அண்ணாமலை பேசியதில்கூட, ஒரு நெருங்கிய நண்பனாக எனக்கு வருத்தம் உள்ளது” என்றார்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய டி.டி.வி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டி.டி.வி தினகரன் அண்மையில் வெளியேறினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டேன் என அவர் தொடர்ந்து பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய் பரப்புரை வாகனம் பறிமுதல்? பரபரப்பு தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com