Vaiko: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
Vaiko: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on: October 3, 2025 at 1:48 pm
Updated on: October 3, 2025 at 1:50 pm
சென்னை, அக்.3, 2025: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை (அக்.2, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி திராவிட மாடல் அரசின் மீது வழக்கம்போல குற்றம் சாட்டியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கி பிடித்து, குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய பா.ஜக அரசின் ஊது குழலாக மாறி அதை ஆதரித்து பேசி வருபவர் ஆளுநர் இரவி என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க : மு.க. ஸ்டாலின் வீடு, பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். சென்னையில் பரபரப்பு!
தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயலும் வஞ்சகர்களுக்கு துணை போகும் வேலையை செய்ய துணிந்த ஆளுநர் ஆர் .என் .இரவி, தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முனைந்து செயல்படுகிறார்.
அதனால்தான் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய “தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்” உருவாக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023 – 2024- ஆம் ஆண்டு மே திங்களில் முதல்வரால் தொடங்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுவரை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கென்று தனியே முதன் முதல் தொடங்கப்பட்டுள்ள திட்டம் என்பது இத்திட்டத்தின் தனிப்பெருமையாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விஜய் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.. தி.மு.க.வுக்கு அரசியல் தெரியும்.. எஸ்.வி சேகர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com