Mallikarjun Kharge hospitalised: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mallikarjun Kharge hospitalised: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: October 1, 2025 at 2:25 pm
பெங்களூரு, அக்.1, 2025: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட உள்ளது என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
பிரியங் கார்கே ட்வீட்
Sri Kharge was advised pacemaker to be implanted and is admitted to the hospital for the planned procedure. He is stable and doing well.
— Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) October 1, 2025
Grateful to all of you for your concern and wishes.
இது குறித்து பிரியங் கார்கே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஸ்ரீ கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. திட்டமிட்ட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். நலமாக இருக்கிறார். உங்கள் அக்கறைக்கும் வாழ்த்துக்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்னை?
83 வயதான கார்கே புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு கால் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் நலமாக உள்ளார், கவலைப்பட ஒன்றுமில்லை. மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அஸ்ஸாம் பாடகர் மரணம்.. மேலாளர், ஈவென்ட் அமைப்பாளர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com