Kanimozhi: திருவண்ணாமலையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Kanimozhi: திருவண்ணாமலையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: September 30, 2025 at 11:31 pm
சென்னை, செப்.30, 2025: திருவண்ணாமலையில் காவலர்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு, தி.மு.க. எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், “திருவண்ணாமலை அருகே பெண்ணொருவர், காவலர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கனிமொழி ட்வீட்
திருவண்ணாமலை அருகே பெண்ணொருவர், காவலர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இருவரையும் கைது செய்துள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களே இத்தகைய…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 30, 2025
மேலும், “ குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இருவரையும் கைது செய்துள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதி வேண்டும்
தொடர்ந்து, “பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” எனவும் கனிமொழி வற்புறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தாயின் கண்முன்ணே இளம்பெண் பாலியல் வன்புணர்வு.. அன்புமணி கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com