Vaiko : “தமிழ்நாட்டில் இரத்தக்களரி, கிளர்சியை அவர் (ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார்; அது நடக்காது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
Vaiko : “தமிழ்நாட்டில் இரத்தக்களரி, கிளர்சியை அவர் (ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார்; அது நடக்காது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
Published on: September 30, 2025 at 1:27 pm
சென்னை, செப்.30, 2025: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
(நன்றி ஏ.என்.ஐ)#WATCH | Chennai, Tamil Nadu: On TVK leader Aadhav Arjuna's now-deleted X post on Karur stampede, MDMK Founder Vaiko says, "He wants a bloodshed revolution. That will not happen in Tamil Nadu. Such a rebellion will not take place…" pic.twitter.com/0euUW4Ksvg
— ANI (@ANI) September 30, 2025
அப்போது, “தமிழ்நாட்டில் கிளர்ச்சியை அவர் (த.வெ.க. ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார். இதுபோன்ற இரத்தகளரி அல்லது கிளர்ச்சி இங்கு நடக்காது. தமிழ்நாட்டில் அது நடக்காது. ஒருபோதும் அது நடக்காது. அதற்கு இங்கு இடமில்லை” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் மரணம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கரூர் கூட்ட நெரிசலுக்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை குற்றஞ்சாட்டி ட்வீட் செய்திருந்தார். மேலும் ட்வீட்டும் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வைகோ இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள்.. சி.பி.ஐ விசாரணை தேவை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com