Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Published on: September 29, 2025 at 5:00 pm
பெங்களூரு, செப்.29, 2025: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் (பிஎஸ்ஐ) மீது சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட, பைக் ஓட்டி மீது கர்நாடக காவல்துறை இன்று (திங்கள்கிழமை) வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிஎஸ்ஐ பார்வதி அளித்த புகாரின் பேரில், பைக் ஓட்டி செல்வகுமார் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பெங்களூரு காவல்துறையினரின் கூற்றுப்படி, ராஜாஜிநகர் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஆர் ஆர் சர்க்கிளில் பிஎஸ்ஐ பார்வதி அபராதம் வசூலித்து வந்தார்.
அப்போது, செல்வகுமார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேலும் தொலைபேசியிலும் பேசிக் கொண்டிருந்தார்.காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து அபராதத்தை செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது.
செல்வகுமார் இந்த சம்பவத்தின் வீடியோவையும் பதிவு செய்து பின்னர் சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். பிஎஸ்ஐ பார்வதிக்கு எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவர் குறித்து மோசமான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிஎஸ்ஐ பார்வதி ராஜாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : பட்டியல் சாதியினர் குறி.. குழு குழுவாக பிரிந்து மதமாற்றம்.. முக்கிய நபரை தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com