Karnataka HC denies bail to rape accused : மகாத்மா காந்தியடிகள் மற்றும் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Karnataka HC denies bail to rape accused : மகாத்மா காந்தியடிகள் மற்றும் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on: September 29, 2025 at 12:52 pm
Updated on: September 29, 2025 at 12:53 pm
பெங்களூரு, செப்.29, 2025: பெண்களை மதிப்பது தொடர்பான மனுஸ்மிருதியின் வசனம் மற்றும் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் மகாத்மா காந்தியின் கருத்தையும் பயன்படுத்தி, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு பீகார் மாநிலம் பங்காவைச் சேர்ந்த 19 வயது பட்டியல் பழங்குடிப் பெண்ணைப் பற்றியது. அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள ஏலக்காய்த் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர் கேரளாவிலிருந்து அதிகாலை 1.30 மணியளவில் பெங்களூருவின் கே.ஆர். புரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.அவரது உறவினருடன் சேர்ந்து மகாதேவபுரா நோக்கி உணவுக்காகச் சென்றபோது, ரயில் நிலையம் அருகே இரண்டு ஆண்கள் அவரைத் பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க நீதுபதி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆக்ராவில் சிக்கிய காம சாமியார்.. யார் இந்த சைதன்யா? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com