Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: September 28, 2025 at 10:52 am
ஆக்ரா, செப்.28, 2025: டெல்லி ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சைதன்யானந்த சரஸ்வதி சுவாமிகள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பார்த்த சாரதி என இயற்பெயர் கொண்ட இவர், நிறுவனத்தில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச மேசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹோலி உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, மாணவிகளின் கன்னத்தில் வண்ணத்தை முதலில் பூசுவது போன்ற சில்மிஷ வேலைகளிலும் ஈடுபட்டார் என எஃப்.ஐ.ஆர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சைதன்யானந்த சரஸ்வதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், “அவர் தொடர்ந்து தனது தோற்றத்தையும் மறைவிடங்களையும் மாற்றி வந்தார்; அவரைக் கண்டுபிடிக்க ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வந்தன” என்றனர். இந்நிலையில், சனிக்கிழமை (செப்.27, 2025) இரவு ஆக்ராவில் அவர் இறுதியாக பிடிபட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டி.சி.பி (தென்மேற்கு) அமித் கோயல் தெரிவித்தார்.
டெல்லி வசந்த் குஞ்சில் உள்ள ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சரஸ்வதி சாமியார் மீது பல்வேறு எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளன. இவர், மாணவிகளை பெருமளவில் பாலியல் வன்கொடுமை செய்ததில் இருந்து ₹122 கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஹோலி வண்ணங்களை மாணவிகள் மீது பூசிய சாமியார்… டெல்லியில் அடுத்த பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com