India vs Pakistan matches in the Asia Cup: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி துரதிருஷ்டவசமானது என சிவசேனா (யூ.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
India vs Pakistan matches in the Asia Cup: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி துரதிருஷ்டவசமானது என சிவசேனா (யூ.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
Published on: September 27, 2025 at 3:28 pm
Updated on: September 27, 2025 at 3:29 pm
மும்பை, செப்.27, 2025: இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி துரதிருஷ்டவசமானது; இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என சிவசேனா (யூ.பி.டி) தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “இது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடி பிரதமராக இல்லாதபோது, அவர் ஒரு நேர்காணலில் பாகிஸ்தானுக்கு நாம் புரியும் மொழியில் பதிலளிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் அழக்கூடாது என்றும் கூறினார்” என்றார்.
சோனம் வாங்சுக் கைதுக்கு எதிர்ப்பு
இதையடுத்து வாங்சுக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உத்தவ் தாக்கரே, “தேசபக்தர் மற்றும் நாட்டிற்கு நிறைய செய்த சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார், மறுபுறம், பாகிஸ்தான் போன்ற ஒரு தேசத்துடன் நாம் கிரிக்கெட் விளையாடுகிறோம்” என்றார்.
இதையும் படிங்க : சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்.. இன்று தீர்ப்பு
போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தல்
VIDEO | Mumbai: On India vs Pakistan matches in the Asia Cup, Shiv Sena (UBT) leader Uddhav Thackeray says, "It is unfortunate. When PM Modi wasn’t the PM, he said in an interview that we should respond to Pakistan in the language it understands and not go crying to the US. Sonam… pic.twitter.com/jpMllvQR9R
— Press Trust of India (@PTI_News) September 27, 2025
மேலும், “முதல் இரண்டு போட்டிகளைப் புறக்கணித்தவர்கள் நாளைய போட்டியையும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்யும் ஸ்பான்சர்கள், நாட்டின் உணர்வுக்கு எதிரான ஒரு போட்டியை ஸ்பான்சர் செய்வதை மறுபரிசீலனை செய்து தங்கள் ஸ்பான்சரை திரும்பப் பெற வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சை.. மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com