Katrina Kaif Pregnancy : பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பம் தரித்துள்ளார். கணவர் விக்கி கௌஷல் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
Katrina Kaif Pregnancy : பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பம் தரித்துள்ளார். கணவர் விக்கி கௌஷல் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
Published on: September 23, 2025 at 2:59 pm
புதுடெல்லி, செப்.23, 2025: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் (42)- நடிகர் விக்கி கௌஷல் (37) ஜோடி தங்கள் முதல் கர்ப்பத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.இது குறித்து அவர்கள், “எங்கள் வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தை மகிழ்ச்சியும் நன்றியும் நிறைந்த இதயங்களுடன் தொடங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கத்ரீனா கைஃப் கனவு
2010 ஆம் ஆண்டு, விக்கி கௌஷலை சந்திப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு (10 ஆண்டுகளுக்கு) முன்பு, கத்ரீனா கைஃப் தனது திருமணம் மற்றும் குடும்பம் குறித்த கனவு பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில், “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். கணவனும் குழந்தைகளும் இருப்பது மிகவும் முக்கியம் என்ற மனநிலையை கொண்டவள் நான். ஆகவே, நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று கனவு காண்கிறேன். அது நான்தான். இதுதான் என் கனவு” என்றார்.
திருமணம்
2021 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஃபோர்ட் பர்வாராவில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ரிசார்ட்டில் கத்ரீனாவும் விக்கியும் திருமணம் செய்து கொண்டனர். எனினும், அவர்கள் இதுவரை எந்த படத்திலும் ஒன்றாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சைஃப் அலிகான் அறையில் தூங்க அனுமதிக்கப்படவில்லை.. சோஹா அலிகான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com