UP man kills live-in partner:தனது காதலி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லிவ்-.இன் உறவில் இருந்த காதலியை கொன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.
UP man kills live-in partner:தனது காதலி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லிவ்-.இன் உறவில் இருந்த காதலியை கொன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.
Published on: September 22, 2025 at 10:39 am
கான்பூர் (உ.பி), செப்.22, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காதலி தங்கள் மற்றொரு லிவ்-இன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சுராஜ் குமார் உத்தம் என்ற இளைஞன் தனது 20 வயது லிவ்-இன் பார்ட்னர் அகன்க்ஷா என்கிற மஹியை கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைக்கு பின்னர் நண்பரின் உதவியுடன், அவர் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டா அருகே யமுனை நதியில் வீசியுள்ளார்.இந்நிலையில், இரண்டு மாத விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி தீபேந்திர நாத் சவுத்ரி கூறுகையில், ஆகான்ஷாவின் தாயார் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவர் காணாமல் போனதாக புகார் அளித்தார். பாரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த அந்த இளம் பெண், சமூக ஊடகங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.அவர்களின் நட்பு விரைவில் லிவ்-இன் உறவாக வளர்ந்தது, மேலும் இருவரும் ஹனுமந்த் விஹாரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர்” என்றார்.
ஆரம்பத்தில், அகன்ஷா தனது துணையுடன் ஓடிப்போய்விட்டதாக போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அவரது தாயார் இந்த விஷயத்தைத் தொடர்ந்து விசாரித்து, காவல் ஆணையரை அணுகினார்.விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கும் மற்ற பெண்களுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அகன்ஷா இதைக் கண்டுபிடித்ததும், அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில், சுராஜ் குமார் உத்தம் அகன்ஷாவை அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பஸ் டிரைவருக்கு பளார் விட்ட சிங்கப் பெண்.. வீடியோவா அனுப்புற.. வீடியோ..?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com