ODI Live Streaming: இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 3வது போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக எப்படி பார்ப்பது என்பது தெரியுமா?
ODI Live Streaming: இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 3வது போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக எப்படி பார்ப்பது என்பது தெரியுமா?
Published on: September 20, 2025 at 1:41 pm
புதுடெல்லி, செப்.20, 2025: இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்தொடர் சமநிலையில் உள்ளது. இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஃபார்மில் உள்ளார், மேலும் அவர் மீண்டும் தனது அணிக்கு ஒரு சிறந்த வீரராக மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
தொடர் ரவுண்ட்-அப்
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது, அதன் பிறகு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் இந்தியா வலுவாக மீண்டது. முதல் இரண்டு போட்டிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றன.
ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும், இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்த நிலையில், இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும், ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைத்தளத்தில் லைவ் ஆக பார்க்கலாம்.
இதையும் படிங்க : ‘புதுமையான சிந்தனையாளர்’.. சூர்ய குமாருக்கு சுனில் கவாஸ்கர் பாராட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com