SBI Bank Robbery in Karnataka: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையில் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையடித்தனர்.
SBI Bank Robbery in Karnataka: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையில் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையடித்தனர்.
Published on: September 17, 2025 at 1:28 pm
பெங்களூரு, செப்.17, 2025: கர்நாடகா மாநிலத்தின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) கிளையில், முகமூடி அணிந்த நபர்கள் நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் கொள்ளையடித்துச் சென்றனர்.
VIDEO | Vijayapura, Karnataka: A gang of masked men struck at State Bank of India branch looting cash and gold worth crores on Tuesday evening. Police have launched manhunt to nab the criminals.#Bankloot #KarnatakaNews
— Press Trust of India (@PTI_News) September 17, 2025
(Full video available on PTI Videos -… pic.twitter.com/51eq1Jen6Y
(நன்றி பி.டி.ஐ)
இது தொடர்பாக முதற்கட்ட தகவலின்படி, வங்கியில் இருந்து 58 கிலோ தங்கம் மற்றும் ரூ.8 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, செவ்வாய்க்கிழமை மாலை வங்கிக்குள் கொள்ளையர்கள் புகுந்து, ஊழியர்களைக் கட்டிப்போட்டு, கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையில், அவர்கள் பயன்படுத்திய கார் மகாராஷ்டிராவின் பந்தர்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் மீடியாக்கள் கொள்ளையர்கள் இராணுவ சீருடை அணிந்திருந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும், “அவர்கள் மேலாளர், காசாளர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி, எச்சரிக்கை பொத்தானை அழுத்துவதைத் தடுத்தனர்” என்றும் கூறியுள்ளன.
அன்று கனரா வங்கி..
இதற்கு முன்பு, ஜூன் 2025 இல், கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜய்புரா கிளையில் கொள்ளையர்கள் 59 கிலோ அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தையும் ரூ.5.2 லட்சத்தையும் கொள்ளையடித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில், 16 ஆயிரம் வெளிநாட்டினர் நாடு கடத்தல்.. ஆபரேஷன் ரெடி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com