RSS on PM Narendra Modi’s 75th Birthday: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
RSS on PM Narendra Modi’s 75th Birthday: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published on: September 17, 2025 at 12:04 pm
புதுடெல்லி, செப்.17, 2025: பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 17 புதன்கிழமை 75 வயது நிறைவடைந்ததையொட்டி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பிரதமரின் “அசாதாரண தலைமை”யைப் பலர் பாராட்டிய போதிலும், மற்றவர்கள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வாழ்த்தினர்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “உங்கள் அசாதாரண தலைமையின் மூலமும் கடின உழைப்பின் உச்சத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம், நாட்டில் சிறந்த இலக்குகளை அடையும் கலாச்சாரத்தை நீங்கள் வளர்த்துள்ளீர்கள். இன்று, உலக சமூகமும் உங்கள் வழிகாட்டுதலில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் தனித்துவமான தலைமையுடன் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :இந்தியாவில், 16 ஆயிரம் வெளிநாட்டினர் நாடு கடத்தல்.. ஆபரேஷன் ரெடி..!
உள்துறை அமைச்சர் அமித் ஷா
இதற்கிடையில், “நாட்டில் சிறந்த இலக்குகளை அடைவதற்கான கலாச்சாரத்தை விதைத்தவர்; தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
Wishing Prime Minister Narendra Modi ji a happy birthday and good health.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2025
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சசி தரூர்
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தேச சேவையில் தொடர்ச்சியான வெற்றிகளால் நிறைந்ததாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளில் அவருக்கு ஆர்.எஸ்.எஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், “இந்தியாவின் வரலாற்றை வரலாற்றை எழுதுகிறார் என்றும் நாட்டிற்காக ஓய்வின்றி அரும்பாடுபட்டு உழைக்கிறார் என்றும் உலக அரங்கில் பாரத தேசத்தின் பெருமையை பறைசாற்றுகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி பி.எம்.டபிள்யூ கார் விபத்து.. பெண் டிரைவர் மது அருந்தி இருந்தாரா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com