Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 15, 2025 at 9:06 pm
லக்னோ, செப்.15, 2025: உத்தரப் பிரதேசத்தில், சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை ஒரு இளைஞர் தெரிவிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த இளைஞரை கைது செய்யக் கோரி காவல் நிலையத்திற்கு வெளியே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தை நடத்தியதாகக் கூறி, ஒரே சமூகத்தைச் சேர்ந்த 200 அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஷாஜகான்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சதார் பஜார் காவல் நிலையத்திற்கு வெளியே கூடி சாலையை மறித்த பின்னர் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால், அந்தப் பகுதியில் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றவும் லேசான தடியடி நடத்தப்பட்டது.
இது குறித்து பேசிய சதார் பஜார் காவல் நிலையத்தின் காவல் நிலைய அதிகாரி (SHO) அரவிந்த் சவுகான், காவல் நிலையத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக 200 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : காங்கிரஸிற்கு 1 சீட் கூட இல்லை.. ஏன் அப்படி பேசினார் தேஜஸ்வி? பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com