ITR Deadline Extension 2025: வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இதுவரை நீட்டிக்கப்படவில்லை.
ITR Deadline Extension 2025: வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இதுவரை நீட்டிக்கப்படவில்லை.
Published on: September 15, 2025 at 4:30 pm
சென்னை, செப்.15, 2025: வருமான வரித் தாக்கல் செய்ய இன்று (செப்.15, 2025) கடைசி நாளாகும். இந்த நிலையில், வருமான வரி ரிட்டன் தொடர்பாக எந்த நீட்டிப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், வருமான வரி போர்ட்டலின்படி, இன்று மதியம் 12:00 மணி நிலவரப்படி, இதுவரை மொத்தம் 6.7 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், 6.03 கோடி வருமான வரி தாக்கல்கள் வரி செலுத்துவோரால் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் 4 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் வருமான வரித் துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, ஜூலை 31, 2024 நிலவரப்படி, 7.6 கோடி ஐடிஆர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதாவது, செப்டம்பர் 15 ஆம் தேதி என்பது தணிக்கை செய்யாத வரி செலுத்துவோருக்குக் கடைசி தேதியாகும். இதில் பெரும்பாலான சம்பளம் வாங்கும் நபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாதவர்கள் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் vs வங்கி எஃப்.டி. எது பெஸ்ட் முதலீடு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com