Actor Atharva Murali: நடிகர் அதர்வா முரளி, திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Actor Atharva Murali: நடிகர் அதர்வா முரளி, திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Published on: September 10, 2025 at 2:47 pm
Updated on: September 10, 2025 at 2:48 pm
சென்னை, செப்.10 2025: நடிகர் அதர்வா முரளி திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்தார். நடிகர் அதர்வா முரளி 2010ஆம் ஆண்டு பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி என்ற படத்தின் மூலமாக கவனம் பெற்றார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படமும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், தற்போது அதர்வா முரளிக்கு 36 வயதாகிறது. இதனால், இவர் வீட்டில் டும் டும் மேளச் சப்தம் ஒலிப்பது எப்போது என அவரது ரசிகர்கள் உள்பட பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார். அதாவது நடிகர் விஷால் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது அதர்வா குறித்து பேசினார். அப்போது, “எனக்கு அடுத்து அதர்வாவுக்குதான் திருமணம் நடக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள அதர்வா முரளி, “விஷால் சார் எப்போது தாலி கட்டுகிறாரோ, அதன்பிறகுதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன்” என்றார்.
நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வாட்ச்மேன் வேலை.. அஜித் பட நடிகரின் பரிதாப நிலை.. யார் இவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com