Japan PM Shigeru Ishiba steps down: ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை (செப்.7, 2025) பதவி விலகுவதாக அறிவித்தார்.
Japan PM Shigeru Ishiba steps down: ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை (செப்.7, 2025) பதவி விலகுவதாக அறிவித்தார்.
Published on: September 7, 2025 at 9:29 pm
டோக்கியோ, செப்.7 2025: ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை (செப்.7, 2025) பதவி விலகுவதாக அறிவித்தார். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள் (LDP) பல மாதங்களாக நீடித்த அரசியல் கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக இந்த ராஜினாமா நடந்துள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவியேற்ற 68 வயதான ஷிகெரு இஷிபா பல வாரங்களாக பதவி விலகுவதற்கான அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டார். அமெரிக்க வரிகள், விலை உயர்வு, அரிசி கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய பதற்றங்கள் உள்ளிட்ட மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை (செப்.7, 2025) பதவி விலகுவதாக அறிவித்தார்.
அடுத்த பிரதமர் யார்?
இதற்கிடையில் அடுத்த பிரதமராக வேளாண்மை அமைச்சரும் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமுமான ஷின்ஜிரோ கொய்சுமி வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜப்பான் வங்கியின் வட்டி விகித உயர்வை விமர்சிக்கும் கட்சியின் மூத்தத் தலைவரான சானே தகைச்சிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com