K Veeramani wishes MP Thol Thirumavalavan: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
K Veeramani wishes MP Thol Thirumavalavan: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Published on: August 18, 2025 at 4:03 pm
சென்னை, ஆக.18 2025: ”திருமா என்னும் அரிமாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து” என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் – எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மாணவப் பருவந் தொட்டு, பெரியார் திடலில் வளர்ந்த எங்கள் பிள்ளை! ஈழத் தமிழர்களின் உரிமைக்காகக் கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கு ஏற்றுக் கைதும் செய்யப்பட்டவர்.
திராவிடர் இயக்கத்தின் மூன்றாவது குழல் துப்பாக்கி என்று நாம் கூறுவது வார்த்தை அழகுக்காக அல்ல – கொள்கை, நடப்பு, லட்சிய அடிப்படையில்தான்! திராவிட இயக்கத்தோடு ஒன்றிப் பயணம் செய்து வரக் கூடியவர். ஆசைகாட்டி எந்த வலையை வீசினாலும், அதற்கெல்லாம் மயங்காத, உறுதியான இலட்சியவாதி!
சிற்சில சந்தர்ப்பங்களில் அவரை அழைத்து ஆக்க ரீதியாகக் கருத்துக் கூறும் அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ளும் உறவு எங்களிடம் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாத திருமா என்னும் அரிமா நீண்ட காலம் வாழ்ந்து, கட்டுப்பாட்டுடன் தமது இயக்கத்தை வெற்றிப் பாதையில் நடைபோட வைக்கும் தலைவராக நாளும் புகழ் பெற்று, இலட்சியப் பாதையில் தொண்டறம் புரிய நீடு வாழ உள்ளங் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல.. கே. பாலு அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com