Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
Published on: July 2, 2025 at 5:57 pm
சென்னை ஜூலை 2 2025: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தபின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது வைகோ, ” இந்துத்துவ சனாதன சக்திகள் திராவிட இயக்கத்தை அழிக்க செயல்படுகின்றன; ஆனால் அவர்களால் ஒருபோதும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” என்றார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைமையில் தனது கட்சி தேர்தலை சந்திக்கும் என கூறினார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோ பதவி இந்த ஆண்டோடு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், தேர்தல் நேரத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்பி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com