Thailand’s female prime minister suspended: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thailand’s female prime minister suspended: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: July 2, 2025 at 11:47 am
பாங்காங், ஜூலை 2.2025: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவைக்கு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
என்ன பிரச்சனை?
தாய்லாந்து நாட்டில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை இறக்குமதி செய்ய கம்போடியா அரசு தடை விதித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கம்போடியா பிரதமருடன், தாய்லாந்து பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது கம்போடியா பிரதமரை உறவு முறை சொல்லி அழைத்தார்.
இது தொடர்பான ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தன. இதை தொடர்ந்து, பேடோங் டர்ன் ஷினவத்ரா பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தாய்லாந்து பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, தனது தொலைபேசி உரையாடலின் போது ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசியுள்ளார். இதுவே அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.
பேடோங் டர்ன் ஷினவத்ரா விளக்கம்
ராஜதந்திர நடவடிக்கையின் பொருட்டு தாம் கம்போடிய பிரதமரை உறவு முறை சொல்லி அழைத்ததாக விளக்கம் அளித்துள்ளார் பேடோங் டர்ன் ஷினவத்ரா.
புதிய அமைச்சரவைக்கு ஒப்புதல்
தாய்லாந்து பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இந்த நிலையில் புதிய அமைச்சரவைக்கு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தீர்மானம் 7-2 என்ற வாக்குகளில் நிறைவேறியது.
இதையும் படிங்க; வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com