இலங்கையில் பாறையில் இருந்து உருண்ட பேருந்து.. 21 பேர் உயிரிழப்பு.. பெரும் சோகம்!

Sri Lanka bus accident 2025: இலங்கையில் நடந்த போர் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 11, 2025 at 2:11 pm

கொழும்பு, மே 11 2025: இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பயணிகள் பேருந்து ஒன்று பாறையிலிருந்து சறுக்கி விழுந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை இலங்கை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த விபத்து, மத்திய மாகாணத்தின் கோட்மலையில் பேருந்து ஓட்டுநர் மலைப்பாங்கான பகுதியில் இடதுபுறம் திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு யாத்திரைத் தலமான கதிர்காமத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு 75 பயணிகளை இந்தப் பேருந்து ஏற்றிச் சென்றது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, பாறையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது; இந்திய விமானப் படை

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com